Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பலவருடங்களுக்குப் பிறகு ஜனவரி1 இல் படங்கள் வெளியீடு

பண்டிகைநாட்களில் திரைப்படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் போட்டிபோடுவார்கள். அந்தவகையில் ஜனவரி முதல்தேதி புத்தாண்டாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்தநாளில் திரைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

கடந்த பல்லாண்டுகளில் 2004 ஆம் ஆண்டு கேம்பஸ், என்னவோபிடிசசிருக்கு, காதல்சரிகம, உள்ளைத்தைக்கிள்ளாதே ஆகிய நான்குபடங்கள் ஜனவரி முதல்தேதி வெளியாகியிருக்கிறது. (தகவல் - விக்கிபீடியா)அதன்பின், 2010 ஆம் ஆண்டு புகைப்படம், துணிச்சல் ஆகிய இரண்டுபடங்கள் ஜனவரி ஒண்ணாம்தேதியில் வெளியாகியிருக்கிறது.

அதற்குப் பிறகு ஆறாண்டுகளுக்குப் பிறகு வருகிற 2016 ஜனவரி ஒண்ணாம்தேதி மாலைநேரத்துமயக்கம், பேய்கள்ஜாக்கிரதை ஆகிய இரண்டுபடங்கள் வெளியாகவிருக்கின்றன. ஜனவரி முதல்தேதியில் படங்களை வெளியிட தயாரிப்பாள்£கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை? என்று விசாரித்தால், டிசம்பர் 25 கிறிஸ்துமஸையொட்டி சில பெரியபடங்கள் வெளியாகும். அப்படங்கள் இரண்டுவாரங்கள் ஓடக்கூடியதாக அமையும் என்று சொல்கிறார்கள்.

அதற்கடுத்து பொங்கல்வெளியீடு இருப்பதால் எல்லோரும் அந்தத்தேதியில் படத்தை வெளியிட்டால் நான்கைந்துநாட்கள் நல்லவசூல் இருக்கும் என்பது நிச்சயம். அதேபோல கிறிஸ்துமஸ்விடுமுறையின் கடைசிநாளாக ஜனவரி முதல்தேதி அமைவதால் அந்தநாளில் படம் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மீறி, நம் படம் ஒருவாரம் படம் ஓடினால்போதும் என்று நினைப்பவர்கள் ஜனவரி முதல்தேதியில் வெளியிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இந்தஆண்டும் டிசம்பர் 24 இல் பசங்க2, பூலோகம் ஆகிய இரண்டுபெரிபடங்கள் வரவிருக்கின்றன. பொங்கலுக்கு நான்கு பெரியபடங்கள் வரவிருக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.