Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நண்பரின் பிறந்தநாளில் விஜய் சேதுபதியின் ஆட்டம்- வைரலாகும் வீடியோ

  சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனவாம்.

அவர் ஆடிப்பாடும் ஒரு பாடல்காட்சியின் படப்பிடிப்புக்காகப் பறையிசைக்கலைஞர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று, படத்தில் நடிக்கும் நடிகர்அருள்தாஸின் பிறந்தநாள், அதனால் அவர் பிறந்தநாளை படப்பிடிப்புத்தளத்திலேயே கொண்டாடியிருக்கின்றனர்.

 

அப்போது படப்பிடிப்புக்காக வந்திருந்த பறையிசைக்கலைஞர்கள் பறையை இசைக்க அதற்குத் தகுந்தாற்போல் ஆடத்தொடங்கிவிட்டார் விஜயசேதுபதி. உடனே பிறந்தநாள் கொண்டாடிய அருள்தாஸ் மற்றும் படப்பிடிப்பில் பங்குபெற்ற பலரும் விஜயசேதுபதியுடன் இணைந்து ஆடத்தொடங்கிவிட்டார்களாம்.

இதனால் பிறந்தநாள் கொண்டாடிய அருள்தாஸ், மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தார் என்கிறார்கள். அதை அங்கிருந்த நண்பர்கள் படம் பிடித்து சமுகவலைதளங்களில் பகிர்ந்துவிட அது பரபரப்பாகப் பரவிக்கொண்டிருக்கிறது.    

வீடியோவைக் காண: 

 

Semma kuthuu!! Actor Arul Dass birthday celebration!! ;) #Vijaysethupathy #DharmaduraiSpot

Posted by Kiruba Murugesh on Tuesday, December 22, 2015

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close