Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னதான் நடக்கிறது சிம்பு விவகாரத்தில்...

சிம்புவின் பீப் பாடல் தினம் ஒரு சர்ச்சையை உருவாக்கிய வண்ணம் உள்ளது. பாடலுக்கு அனிருத் இசையமைத்தார் என நினைத்து  சிம்பு மற்றும்  அனிருத்துக்கு எதிராக, சமூக நல அமைப்புகள், மாதர் சங்கங்கள் எனக் கண்டனங்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இடையில் டி.ராஜேந்தரும் அனிருத் இசையமைத்து என் மகன் பாடிய பாடல் என்றே புகார் மனுவில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிம்பு அளித்த பேட்டியில்  அனிருத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றார். அதே சமயம் அனிருத்தும் எனக்கும் அந்தப் பாடலுக்கும் தொடர்பில்லை எனக் கூறினார்.

இந்தப் பாடலை யாரோ திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டனர். என் சொந்தப் பயன்பாட்டில் உள்ளதை வைத்து யாரும் கேள்விகள் கேட்க முடியாது என்றும் சிம்பு கூறினார். இந்நிலையில் திடீரென பாடலை சிவகார்த்திகேயன் தான் வெளியிட்டார் என வதந்தி பரவியது, உடனே  சிம்பு, சிவகார்த்திகேயனுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என ஒரு ட்வீட்டை போட்டு அந்தச் செய்தியை அடக்கினார்.

யார் வெளியிட்டார் என்றே தெரியாது என போலீஸ் புகாரில் கூறியிருக்கும் சிம்புவால் எப்படி சிவாகார்த்திகேயன்  வெளியிடவில்லை எனக் கூற முடியும். மேலும் போலீஸில் ஒரு வழக்கு சென்று கொண்டிருக்கும் வேளையில் இதுகுறித்து சிம்புவால் மட்டும் அவ்வளவு உறுதியாக எப்படி சொல்லமுடிகிறது. அப்படியெனில் நடக்கும் அத்தனை பிரச்னைகளும் சிம்புவுக்குத் தெரியுமா? அவரேதான் பாடலை வெளியிட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close