Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்தானம் படத்துக்கு ரஜினிபட இசையமைப்பாளர்

இனிமேஇப்படித்தான் படத்தைத் தொடர்ந்து புதுஇயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார் சந்தானம்.

அந்தப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த ஆனந்த்பால்கி என்பவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் தொடக்கக்கட்ட வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறதாம்.

அந்தப்படத்துக்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணனைக் கேட்டிருக்கிறார்கள். அவர் இப்போது ரஜினியின் கபாலி படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்த விஜய் படத்துக்கும் அவரே இசையமைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சந்தானம் படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்தால் படத்துக்குப் பெரிய பலமாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகினார்களாம். அவர் ஒப்புக்கொண்டுவிட்டாராம்.

ரஜினி படத்தின் இசையமைப்பாளர் சந்தானம் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் என்பதால் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். சந்தானத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இந்தப்படம் உதவும் என்றும் சொல்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.