Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை அணியை வாங்கிய விஜயகாந்த் மகன்

விஜயகாந்தின் மூத்த மகனான விஜயபிரபாகரன் சென்னை பேட்மிட்டன் அணியை வாங்கியுள்ளார். அந்த அணிக்கு சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.

அந்த அணியின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அணியில் உள்ள வீரர்,வீராங்கனைகளை செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்ததால் சென்னை பேட்மிட்டன் அணியை  விஜயபிரபாகரன் வாங்கியுள்ளாராம்.

“ இந்த அணியில் நிறைய இளம் வீரர்களும்,குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடிய பி.வி.சிந்து சென்னை அணிக்காக விளையாடுவது எங்கள் அணிக்குப் பலம். மேலும் சிக்கிரெட்டி, ஜெர்ரிசோப்ரா  கிருஷ்ணபிரியா ஆகிய இந்திய வீரர்களும், மீதம் உள்ள ஆறு வீரர்கள் இண்டர்நேஷனல் வீரர்கள் என்றும் கூறியுள்ளார்.

விஜயகாந்தின் இளைய மகனான சண்முகப்பாண்டியனே இந்த டீமின் அம்பாஸிடர். “ தனது சகோதரர் என்பதால் சண்முகப்பாண்டியனை அம்பாஸிடராக நியமிக்கவில்லை. இயல்பாகவே அம்பாஸிடர்க்கு அதிக உயரம் தேவைப்படுவதால் அணியினர் அவரைத் தேர்வுசெய்துள்ளனர்.

சென்னை அணியின் லோகோவில் சிங்கமுகத்தை வைத்ததற்குக் காரணம், பற்றியும் கூறியுள்ளார். “ தான் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் என்றும், இரண்டு ஆண்டுகள் சென்னை அணி இல்லாததால் அந்த அணியை ஞாபகப்படுத்தும் வகையில் சிங்க லோகோவை வைத்துள்ளோம்.

மேலும்  சென்னைகிரிக்கெட் அணிக்கு விசில் போடு,  சென்னைபுட்பால் அணிக்கு சுத்தி போடு என்ற முழக்கம் இருப்பது போல சென்னைபாட்மிட்டன் அணிக்கு ஸ்மாஷர்ஸ் போடு என்றமுழக்கத்தை இந்த அணிக்கு வைத்துள்ளனர்.

மஞ்சள் நிறத்திலான சென்னை அணியின் ஜெர்ஸியையும் இவ்விழாவில் அறிமுகப்படுத்தினர்.சென்னை நேரு விளையாட்டரங்கில் வெள்ள நிவாரணபொருட்கள் வைத்துள்ளதால் அங்கு போட்டிகளை நடத்த இயலவில்லை என்று குறிப்பிட்டார். வாழ்த்துகள் டீம்!!

சென்னை ஸ்மாஷர்ஸ் அறிமுக விழா நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு:

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்