Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கமகன் ரிசல்ட் எதிரொலி, தனுஷ் புதுமுடிவு

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களைத் தொடர்ந்து துரைசெந்தில்குமார் இயக்கும் புதியபடம் கொடி. தனுஷ் முதன்முறையாக இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கம் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.

ஜனவரி முதல்வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கலாம் என்று தனுஷ் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே தங்கமகன் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்பதால் தனுஷ் புதிய முடிவொன்றை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தங்கமகன் படத்தில் அமைதியாக நடித்ததே படத்தின் தோல்விக்குக் காரணம் என்று கருதிய அவர், இனிமேல் அதிரடியான வேடங்களில் மட்டுமே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அவ்வாறு நடிக்கும் படங்களின் வசூல் நன்றாக இருந்ததென்றும் சொல்கிறார்கள்.

ஒரேமாதிரி இல்லாமல் மாற்றி மாற்றி நடிக்கலாம் என நினைத்து அவர் தேர்வு செய்து வைத்திருந்த கதைகளையும் இப்போது மாற்றச் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close