Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி.வி.பிரகாஷின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இதுதானா?

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி .பிரகாஷ் 2015ஆம் ஆண்டு டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய திரைப்படங்கள் மூலம் வெற்றிகரமான இளம் கதாநாயகர்களின் வரிசையில் இடம்பெற்றார்.

இந்நிலையில் டார்லிங் இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ராஜேஷ் மற்றும் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டிராஜ் ஆகியோரின்  படங்களில் ஜி.வி .பிரகாஷ் நடிக்கவுள்ளார். தன் முந்தைய படங்களைப் போல நகைச்சுவை பாணியில் தயாராகும் இப்படங்களுக்கும் வித்தியாசமான தலைப்புகளையே தேர்ந்தெடுத்துள்ளார் ஜி.வி

சாம் ஆண்டன் படத்திற்கு "எனக்கு இன்னொரு பேர் இருக்கு " என்ற பிரபலமான பாஷா பட வசனத்தை தலைப்பாக வைத்துள்ளனர். அதேபோல ராஜேஷ் இயக்கம் படத்திற்கு "கடவுள் இருக்கான் குமாரு " என்றும் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கம் படத்திற்கு "ப்ருஸ் லீ " என்றும் தலைப்பு வைத்துள்ளனர். மேலும் அறிமுக இயக்குநர்களான குணா மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி நடிக்கும் படத்திற்கு "கெட்ட பையன் டா இந்த கார்த்தி " என்று பெயரிடப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கவரும் வகையில் துள்ளலான இசை மற்றும் நகைச்சுவைக் காட்சிகளைக் கொண்டு வரும் படங்களில் நடித்து வரும் ஜி.வி. இது போன்ற தலைப்புகள் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்து வருகிறார் .

ஜி.வி.பிரகாஷ் மட்டுமின்றி வேறு சிலரும் வித்தியாசமான பெயர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்கிறார்கள்.  "போடா அந்த ஆண்டவனே என் பக்கம்", "அடியே காந்தா " போன்ற பிரபல வசனங்களை தலைப்பாகக் கொண்டு படங்கள்  தயாராகி வருகின்றன.  
                                                                                                                                                                       தே. சண்முக பாண்டியன்   

MUST READ

எடிட்டர் சாய்ஸ்