Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலசந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்படவிழா

சென்னையில் பதிமூன்றாவது சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 6 முதல் 13 தேதி வரை நடைபெறவுள்ளது. 57 நாடுகளில் இருந்து 184 படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. தமிழில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் 12 படங்கள் திரையிடப்படவுள்ளன. பல புதுமுக இயக்குனர்களின் படங்களும் இதில் தேர்வாகியுள்ளன.

அறிமுக இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீசிலும் வெற்றிபெற்ற மாயா, கதிர் நடிப்பில் வெளியாகி  பரவலான பாராட்டுகளைப் பெற்ற கிருமி, ஆரஞ்சு மிட்டாய் , சார்லஸ் ஷபிக் கார்த்திகா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, தாக்க தாக்க , கோடைமழை போன்ற புதுமுக இயக்குனர்களின் படங்களுடன் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு, மோகன் ராஜாவின் தனி ஒருவன், ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே ஆகிய திரைப்படங்களும் தேர்வாகியுள்ளன.

மேலும் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர்  மற்றும் ஆச்சி மனோரமா ஆகியோரை பெருமைப் படுத்தும் விதத்தில் அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி , ஒரு வீடு இரு வாசல், மேஜர் சந்திரகாந்த் , அவள் ஒரு தொடர்கதை , சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளன.

2015ஆம் ஆண்டு வெளியான ஜெர்மனி படமான விக்டோரியா முதல் படமாக திரையிடப்படவுள்ளது. ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு பல்வேறு திரைவிழாக்களில் விருதுகளை இப்படம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படம் இயக்க தடை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் இருந்த இரானிய இயக்குநர் ஜாபர் பணஹியின் டாக்ஸி, ஜோர்னி டு தி ஷோர், குரோனிக், அப்ஹ்ரிம் ஆகிய படங்களும் திரையிட தேர்வாகியுள்ளன.  

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியமான இயக்குநர்கள் பங்கேற்று பயிற்சிப் பட்டறைகளை நடத்துவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  பொதுவாக டிசம்பர் மாதங்களில் நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா கொட்டித்தீர்த்த மழையால் ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சத்யம், ஐனாக்ஸ், உட்லண்ட்ஸ் திரையரங்கம் மற்றும் ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெறும் இத்திரைவிழாவில் ஆர்வத்துடன் அனைத்து  நாட்களும் பங்குபெறும் பார்வையாளருக்கு "சிறந்த திரைப்பட ஆர்வலர்" விருதும் வழங்கப்படவுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.