Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முருகதாஸ்- மகேஷ்பாபு படத்தில் மாற்றமா?

முருகதாஸ் இப்போது மௌனகுரு படத்தை இந்தியில் எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் தெலுங்கு முன்னணிநடிகர் மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரு படத்தை எடுக்கத்திட்டமிட்டிருக்கிறார். மகேஷ்பாபு இப்போது பிரமோற்சவம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படம் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது, அதுபோலவே நடந்துகொண்டிருக்கிறதாம்.

ஜனவரியிலிருந்து முருகதாஸ் மகேஷ்பாபு ஆகிய இருவரும் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. திட்மிட்டபடியே படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

அந்தப்படத்துக்குப் பெயரையும் முடிவுசெய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனிமி என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கில் ஆங்கிலத் தலைப்பு வைத்தால் சிக்கல் இல்லை. தமிழில் அப்படி வைக்கமுடியாது. ஆனாலும் இப்படி ஒரு பெயரை முடிவு செய்திருக்கிறார்கள் என்றால் படத்தைத் தெலுங்கில் மட்டும்தான் எடுக்கிறார்களா? என்கிற கேள்வி எழுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close