Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாதவன் படவிழாவில் பாலா, சூர்யா

   மாதவன், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியிருக்கும் படம் இறுதிச்சுற்று. அந்தப்படத்தின் முதல்பார்பை மற்றும் முன்னோட்டம் ஆகியன அடுத்தடுத்து வெளியாகி படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள்வெளியீடு சென்னையில் நடக்கவிருக்கிறது.

ஜனவரி நான்காம்தேதி பாடல்கள் வெளியீட்டுவிழா நடக்கவிருக்கிறது. அதில் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை இயக்குநர் பாலா வெளியிடவிருக்கிறார். நடிகர் சூர்யா பாடல்களைப் பெற்றுக்கொள்ளவிருக்கிறாராம். இந்தப்படத்தை ராஜ்குமார்ஹிரானியுடன் இணைந்து சசிகாந்த் தயாரித்திருக்கிறார்.

அவருடைய நட்புக்காக தயாரிப்பாளர் வருண்மணியன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறாராம். த்ரிஷாவுடனான திருமணம் நடக்காமல் போனதற்குப் பிறகு வருண்மணியன் இவ்விழாவில் கலந்துகொள்கிறார். ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ்நாராயணன்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்