Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த சிக்கலில் சிக்கிய சல்மான்கான்!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு எதிராக, கான் மார்க்கெட் வர்த்தக சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சல்மான் கான் டிசம்பர் 27 அன்று தனது பிறந்தநாளில் khanmarketonline.com என்னும் ஆன்லைன் போர்ட்டல் ஆரம்பித்தார்.

இது இன்னும் செயல் பட ஆரம்பிக்காத நிலையில், பதிவு மட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல குளோபல் பிராண்டான கான் மார்க்கெட், தங்களது பெயரை உபயோகித்ததற்காக சல்மான் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 

எனினும் அகில இந்திய வர்த்தக அமைப்பினர், ஆன்லைன் போர்ட்டல்களுக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், மேலும் 65 வருடங்களாக இந்நிறுவனம் சம்பாதித்துள்ள பெயரை யாரும் உடைக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். இப்போதுதான் ஒரு வழக்கு முடிந்துள்ள நிலையில் மீண்டும் சிக்கலில் உள்ளார் சல்மான் கான். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close