Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தூக்கி அடிச்சிருவேன் முதல் அறிவிருக்கா வரை'... 2015 சர்ச்சை வார்த்தைகள்!

றுத்த கடலையக் கொட்டினா அள்ளிடலாம், வார்த்தையக் கொட்டினா அள்ள முடியுமா, அப்படி அள்ள முடியாத,2015 ஆம் ஆண்டு பஞ்சாயத்துக்குள்ளான சினிமா பிரமுகர்களின் வார்த்தைகள் இதோ...

எவனா இருந்தாலும் வெட்டுவேன்: ஆம்பள இசை வெளியீட்டு விழாவில் விஷால் சொன்னதாக சொல்லி பத்த வச்சிட்டியே பரட்ட ஆர்யா மொமெண்ட். என்னை அறிந்தால், ஐ  ஆகிய  பெரிய படங்கள் வருகையில் உன் படத்தை வெளியிடுகிறாயே என ஆர்யா கேட்டதற்கு விஷால், எவனா இருந்தாலும் வெட்டுவேன் என சொல்லியதாகச் சொல்லி அஜித் ரசிகர்களைக் கொஞ்சம் சீண்டி விட்டு நெட்டில் ரவுசு கட்டினார்கள். பிறகு அதெல்லாம் இல்லீங்க நான் அப்படிச் சொல்லவே இல்லை என விஷால் இன்னொரு நிகழ்ச்சியில் அப்ரூவர் ஆனது வேறு கதை.

பாயும் புலி, பாகுபலி எனக் கேட்கிறது: பாயும் புலி படத்தின் இசை வெளியீட்டில் பாயும்புலி எனச் சொல்லும் போதெல்லாம் என் காதில் பாகுபலி என விழுகிறது என்று லிங்குசாமி சொன்னதுதான் தாமதம் நெட்டிசன்கள் வெச்சு செஞ்சாங்க.

இது அட்டகாசமான ‘புலி’: புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் மூச்சு விடாமல் முப்பது நிமிடங்கள் பேசிய புலி மந்திரம் நம் வீட்டில் மூணு வயது சுட்டிகளுக்கும் மனப்பாடம். இது அதிசய புலி, அட்டகாசமான புலி, இது புலி...

’நாய்’ : சினிமாவுலயும் அரசியல் செஞ்சு , எதிர்கட்சிக்காரரான விஷாலைப் பார்த்து ராதாரவி நாய் என ஒற்றை வார்த்தையைச் சொல்லி பஞ்சாயத்தானதை நாம் மறக்க முடியுமா?

நான் போன் பண்றேன் சிரிக்கிறார்ங்க: நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் சிம்பு பேசிய டயலாக், நான் விஷாலுக்கு போன் பண்றேன் சிரிக்கிறாருங்க. என சொல்ல அடடே ட்ரெண்டானது.

நான் 16 வயசுலயே நடிக்க வந்தவன்: அதே மேடையில் சிம்பு பேசிய டயலாக், நான் 16 வயசுலயே நடிக்க வந்தவன், இன்னிக்கு வந்த உனக்கென்ன தெரியும் நடிகர் சங்கம் பத்தி என காரசாரமாக காய்ச்சி ஊற்றிய சிம்பு தான் மீண்டும் வைரல்..

தூக்கி அடிச்சிருவேன்: கேப்டன் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து எப்போப் பார்த்தாலும் போற பக்கமெல்லாம் வந்து எக்குத் தப்பா கேள்வி கேட்டுகிட்டு, தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ என கூற, ஐயோ பத்திக்கிச்சு.

சகிப்புத்தன்மை: அமீர்கான் இந்தியாவில் மதச் சகிப்புத்தன்மை இல்லை அதனால் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி சமூக வலைதளங்களின் வாய்க்கு அவல் கொடுத்தார்.

அறிவிருக்கா: இந்த வருடத்தின் டாப் ட்ரெண்ட் சர்ச்சை வார்த்தைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தை. இளையராஜா டிவி நிருபரைப் பார்த்து அறிவிருக்கா, அறிவிருக்குங்கறத எந்த அறிவ வெச்சு நீ சொல்ற எனக் கேட்டு மீடியாக்களை கொந்தளிக்க வைத்தார்.

தூ: யார் என்ன ட்ரென்ட் உருவாக்கினாலும் கேப்டன் ட்ரெண்டே தனி தான். பத்திரிகையாளர்களைப் பார்த்து  தூ என சொல்லிவிட்டு 2015ம் ஆண்டை இனிதே முடித்து வைத்தார்.

இவர்கள் சொன்ன சில வார்த்தைகளைத் தவிர்த்து மற்ற அனைத்துமே சமூக அளவில் கொஞ்சம் சர்ச்சைகளை உருவாக்கக் கூடியவைதான். 2016ஆம் ஆண்டிலாவது ரோல் மாடல்களாக இருக்க வேண்டிய இவர்கள் தங்கள் இருக்கும் அந்தஸ்து மற்றும் பொறுப்புகள் உணர்ந்து வார்த்தைகளை பக்குவமாக கையாளுவார்கள் என நம்புவோம்.

- ஷாலினி நியூட்டன் -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close