Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல்ஹாசன் படத்தில் ஸ்ருதிஹாசன்?

கமல் இப்போது மலையாள இயக்குநர் சஞ்சீவ்குமார் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவர் நடிப்பில் அந்தப்படம்தான் அடுத்து வருகிற படமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

கடந்தஆண்டைப் போலவே இந்தஆண்டும் மூன்றுபடங்களாவது கொடுத்துவிடும் திட்டத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் ஒரு படத்தை அனைவரும் கவனித்தே ஆகவேண்டும் என்கிற வகையில் அமையவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியமொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் புகழ்பெற்றவர் கமல்.

கமலுடைய மகள் ஸ்ருதிஹாசனும் அவரைப்போலவே தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருக்கிறார். ஆகையால் அப்பா கமல்ஹாசனும் மகள் ஸ்ருதிஹாசனும் இணைந்து ஒருபடத்தில் நடிக்கத்திட்டமிட்டிருக்கிறார்களாம். இருவரும் இணையும் அடுத்தபடமாகவே இருக்கலாம் அல்லது அதற்கடுத்த படமாக இருக்கலாம் எப்போது இருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகும் படமாகவே இருக்கும் என்கிறார்கள்.

படத்திலும் அவர்கள் இருவரும் அப்பா மகளாகவே நடிக்கவிருக்கிறார்களாம். அவர்கள் இருவரும் தேவைப்படுகிற அளவு வலிமையான கதை அமைந்திருப்பதால் இருவரும் சேர்ந்து நடிக்கும் முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
 


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close