Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இணையதள பாலியல்குற்றங்களை மையப்படுத்திய படத்துக்கு விருது

இணையதளக் குற்றங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் அது பற்றிய திரைப்படங்களும் வரத்தொடங்கியிருக்கின்றன. இணையக்குற்றங்கள் பற்றிய அழுத்தமான த்ரில்லராக லென்ஸ் என்கிற படம் உருவாகியுள்ளது.

புகைப்படங்களைப் பார்த்தால், பாலியல் தொடர்பான குற்றங்களை மையப்படுத்தியே படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஜெயப்பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

டெல்லியில் நடந்த பயாஸ்கோப் க்ளோபல் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதினைப் பெற்றார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ்.
 
இந்நியில் சென்னையில் நடக்கும் 13-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட லென்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனந்த் சாமி, ஜெயப்பிரகாஷ், அஸ்வதி, மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் பின்னணி இசையமைத்துள்ளார். சுப்பிரமணியபுரம் புகழ் எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!