Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓவியா படத்துக்கு யு சான்றிதழ்

இயக்குநர் மனோஜ்குமாரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ராஜதுரை இயக்கியிருக்கும் படம் சீனி. ராஜூ சுந்தரம்- சிம்ரன் ஜோடியாக நடித்த ஐ லவ் யூ டா படத்தை இயக்கிய இவர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு சீனி படத்தை இயக்கியுள்ளார்.  

அறிமுக நாயகர்கள் சஞ்சய் , பரத்ரவி இருவருடன் முன்னணி இளம் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 2015ம் ஆண்டின் இறுதியில் சென்சார் ஒரு கட் கூட கொடுக்காமல் 'யு' சர்டிபிகேட் வழங்கியுள்ளது.  மேலும் இப்படம் தரமான படமென்று தயாரிப்புத் தரப்பைப் பாராட்டியும் இருக்கிறது சென்சார் போர்ட்.

இப்படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின்  நிருபராக வரும் ஓவியாவுடன், சஞ்சய், பரத்ரவி , ராதாரவி , செந்தில் , 'பருத்திவீரன்' சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன் , கஞ்சாகருப்பு , சின்னிஜெயந்த் , வையாபுரி, ரவிமரியா , தாஸ் , டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார் , பாவாலட்சுமணன், 'லொள்ளு சபா' சுவாமிநாதன் , மீரா கிருஷ்ணன் , புவனா  உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர்.

சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் ' சீனி' படத்தில் நடித்துள்ளதும், அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் உருக்கமான பாத்திரம் ஏற்றுள்ளதும்,  பவர் ஸ்டாருக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்பதும் மேலும்  குறிப்பிடத்தக்கது! ஜனவரி இறுதியில் இந்தப்படம் திரைக்கு வரும் என்று சொல்கிறார்கள்.  
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
[X] Close