Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி வேண்டாம் என்றார், அமிதாப் உடைத்த எந்திரன் 2.0 ரகசியம்

2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி , ஐஸ்வர்யா ராய் பச்சன், சந்தானம், கருணாஸ் நடிப்பில் ஏ,ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி மெகா ஹிட்டான படம் எந்திரன். தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது படம் எந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான எந்திரன்2.0 பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது. படத்தில் வில்லனாக நடிக்க அர்னார்ல்டு வரப்போகிறார் என்று சொல்லப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் இல்லையென்றானதும்  அக்‌ஷய் குமார் தற்போது தேர்வாகி நடித்து வருகிறார்.

 

அர்னால்டு இல்லையென்றதும் உடனே அக்‌ஷய்குமாரிடம் போகவில்லை, நடுவில் அமிதாப்பிடம் வில்லன் கேரக்டருக்கு கேட்கப்பட்டது. ஆனால் அமிதாப் பச்சன் மறுத்துவிட்டார். ஏன் மறுத்தேன்? என்பதற்கான காரணத்தை அவரே சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘ஷங்கர் இந்தப் படத்தின் வில்லன் கேரக்டருக்கு என்னிடம் கேட்டார், நான் உடனே ரஜினிக்கு போனில் தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு ரஜினி, மக்கள் கண்டிப்பாக நீங்கள் வில்லனாக நடிப்பதை ஏற்க மாட்டார்கள். அதனால் ஒப்புக்கொள்ளாதீர்கள் எனக் கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close