Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாதவனைப் புகழ்ந்த சூர்யா

சுதா இயக்கத்தில் மாதவன் நடித்துள்ள ‘இறுதிச்சுற்று’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று  சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை இயக்குனர் பாலா வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.

விழாவில் சூர்யா பேசும்போது,

‘‘இப்படத்தை இயக்கியிருக்கும் சுதா, இதில் ஹீரோவாக நடித்திருக்கும்  மாதவன் ஆகிய இருவரையும் பல ஆண்டுகளாக எனக்கு  தெரியும். இருவரும் மணிரத்னம் சாரிடம் பாடம் பயின்றவர்கள்.  ‘இறுதிச்சுற்று’ கதை உருவானதிலிருந்து இன்று வரையுள்ள எல்லா விஷயங்களையும் சுதா என்னிடம் பகிர்ந்து கொள்வார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் மாதவன் அனைவருக்கும் பிடித்த நடிகர். மாதவன் எப்போதும்  ஒரேமாதிரியான வேடங்களில் நடிப்பதில்லை. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தைக் காட்ட முற்படுவார். இப்படத்தில் அவர் ஏற்றுள்ள கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும். இதற்காக லண்டன் சென்று நிறைய பயிற்சி எடுத்திருக்கிறார். இப்படத்தில் நடிப்பதை ஒரு தவம் மாதிரி செய்திருக்கிறார்.  இப்படம் நிச்சய வெற்றிப் படமாக அமையும்.

இப்படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ராஜ்குமார் இரானி இந்தியில் தயாரித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் இரானியும் இணைந்துள்ளார் என்று கேள்விப்பட்டபோதே இப்படம் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்புக்கும் ஈடு கொடுக்கும் விதமாக படத்தின் முன்னோட்டமும், பாடல்களும்  அமைந்துள்ளன  என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்