Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாம் ஏன் ஆஸ்கருக்காகக் காத்திருக்க வேண்டும்?- கேட்கிறார் பிரபல இயக்குநர்!

ஆஸ்கருக்கு எதற்காக நாம் காத்திருக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.

தேவ்தாஸ், ஸாவரியா, ரவுடி ரத்தோர், மேரி கோம், பாஜிராப் மாஸ்தாணி உள்ளிட்ட பல படங்களை உருவாக்கிய பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி அமெரிக்க விருதுக்காக கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.

ஆஸ்கர் கிடைக்கவில்லை என்ற வருத்தம் நமக்கெதற்கு. எதற்காக அயல் நாட்டிலிருந்து நம் படங்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும். அவர்கள் நம் நாட்டின் தேசிய விருது வேண்டுமென ஆசைப்படுகிறார்களா? இல்லையே.பிறகு ஏன் நாம் மட்டும் ஆஸ்கர் குறித்து யோசிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

பாஜிராவ் மஸ்தாணி வெற்றியைக் கொண்டாடி வரும் சஞ்சயிடம் அடுத்த என்ன படம் என்ன மாதிரியான கதை என கேட்கப்பட்ட போது இப்போதைக்கு நான் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. புத்தாண்டு புது ஐடியாக்களை கொடுக்கும். தற்சமயம் பாஜிராவ் மஸ்தாணி படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிறேன். இனிமேல் தான் அடுத்த படம் குறித்து யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close