Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவர்தான் கோலிவுட் அருந்ததி ராயா?

"புத்தன் இயேசு காந்தி" படத்தில் ’குடைக்குள் மழை’ மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் ஆக்டிவிஸ்ட் கேரக்டரில் நடிக்கிறார். அந்த கேரக்டருக்காக, மதுமிதா புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடிக்கிறாராம்.

இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்களை பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாராம். இந்தப் படத்துக்காக சேட்டிலைட் சேனல் விவாத நிகழ்ச்சியில் மதுமிதா, கிஷோர் ஆகியோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசி நடிக்கும் காட்சியில் மதுமிதா, க்ளிசரின் போடாமல் உண்மையாகவே அழுது நடித்தார். அந்தளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றிவிட்டாராம்.

இயல்பிலேயே இரக்க சுபாவம் கொண்ட மதுமிதா அழுதுகொண்டே வசனம் பேசியது, சுற்றியிருந்த இரும்பு மனம் கொண்டோரையும் கூட உருக வைத்து விட்டதாம்.
ஹ்ம்... இதெல்லாம் அருந்ததி ராய்க்கு தெரியுமா பாஸ்?!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close