Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘பெண்களைப் பெருமைப்படுத்துவேன்!’’- லவ் ஆல்பம் வெளியிடும் அனிருத்

வெள்ளத்தையே மூழ்கடித்ததில் பீப் பாடலுக்கு முக்கியப் பங்குண்டு. அதே பங்கை சிம்புவுக்கும் அனிருத்துக்கும் சேர்த்தே கொடுக்கலாம். ‘‘சிம்பு வீட்டுக்குள்ளேதான் இருக்கான்; வேணும்னா புடிச்சிட்டுப் போங்க!’’ என்று சிம்புவின் தந்தையும், ‘‘என் மகன் அப்படி என்னங்க உலக மகா தப்பு பண்ணிட்டான்? உங்களுக்குத் தேவை அவனோட உயிரா?’’ என்று அவரது அம்மா உஷாவும் - தங்கள் மகனை லைம்லைட்டிலேயே வைத்திருந்தனர். ஆனால், அனிருத்தின் நிலைமை?

வெளிச்சத்திலும் இல்லாமல், பழைய நண்பர்களின் அரவணைப்பும் கிடைக்காமல் தவித்து வருகிறார் அனிருத். இப்போது தனுஷ் வேறு தன்னை மதிக்காமல் இருப்பதாக நினைத்து, பேஸ்மென்ட் டிலிருந்து பில்டிங் வரை ரொம்ப வீக்காக இருக்கிறாராம் ‘பீப்’ இசையமைப்பாளர்.

‘கொலவெறி’ பாடல் மூலம் அனிருத்துக்கு வெறித்தனமான பப்ளிசிட்டி ஏற்படுத்திக் கொடுத்தவர் தனுஷ் என்பது உலகறிந்த விஷயம். தொடர்ந்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, நானும் ரவுடிதான், மாரி, தங்கமகன் என்று நட்புக்கு இலக்கணம், இசை வகுத்தார்கள் நண்பர்கள். ஆனால், இப்போது  ‘பீப்’ பாடல், இருவரின் நட்பிலும் விரிசலை ஏற்படுத்தி விட்டது என்பது அனிருத்துக்குக் கண்கூடாகத் தெரியும். அதன் தொடர்ச்சியாகத்தான், தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கொடி’ படத்திலிருந்து அனிருத்தைத் தூக்கச் சொல்லி சந்தோஷ் நாராயணனை புக் செய்ததும் அவருக்குத் தெரியும்.

சென்னையில் இல்லாததால், தனுஷ் படம் மட்டும் இல்லை; இப்படி பல நண்பர்களின் பட வாய்ப்புகளை இழந்து வருகிறாராம் அனிருத். உஷாரான அனிருத், இந்தக் காதலர் தினத்துக்கு பெண்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ஒரு காதல் ஆல்பம் வெளியிட இருக்கிறார். மலேஷியாவில் இதற்கான ட்யூன் போட்டுக் கொண்டிருக்கிறார் அனிருத். ‘‘இந்த காதல் ஆல்பம் மூலம் காதலைப் புனிதப்படுத்தி, என் மீது உள்ள களங்கத்தைத் துடைத்து புது மனிதனாக வருவேன்! இழந்த என் நண்பர்களையும் மீட்டெடுப்பேன்! தயாராக இருங்கள் இசை ரசிகர்களே!’’ என்று ட்விட்டரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னதோடு, புத்தாண்டு சபதமும் செய்துள்ளார்.

நம்புவோமாக!

- தமிழ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close