Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித், விஜய் படங்களுக்கு அதிகக் கட்டணம்... திரையரங்குகள் மீது வழக்கு!

பெரிய நடிகர்கள் படங்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளின் வசதி, ஏ.சி பொருத்து 120 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேவராஜ் என்பவர், என்னை அறிந்தால் படத்தை ஸ்ரீ சண்முகா தியேட்டரில் பார்த்தேன்.அப்படத்தைப் பார்க்க என்னிடம் 200 ரூபாய் வசூலிக்கப்பட்டது. என்னைப் போல் படம் பார்க்க வரும் பலரிடமிருந்தும் நாள் ஒன்றுக்கு ரூ.9 லட்சம் வரை சட்ட விரோதமாக வசூலிக்கப்படுகிறது. இதே போல் வேதாளம், புலி தூங்காவனம், தங்கமகன் உள்ளிட்ட படங்களுக்கும் அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து டிக்கெட்டுகளின் விலையை சீரமைக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா திரையங்குகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதுமட்டுமல்ல பல திரையரங்குகள் 400 ரூபாய் வரையிலும் பெரிய நடிகர்களின் படத்திற்கான டிக்கெட்டுகளை விற்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு களமிறங்கி அனைத்துத் திரையரங்குகளையும் சோதனை செய்து டிக்கெட்டுகளை சரி செய்தால் மட்டுமே இது சீராகும் என்பதை மறுக்க முடியாது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்