Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ரெட்ட தல’...அஜித் கதையில் கமிட்டான மகேஷ்பாபு..!

ஏ.ஆர். முருகதாஸ் அஜித்துக்காக அயராது பாடுபட்டு  உருவாக்கிய திரைக்கதையை அலேக் செய்துவிட்டார் மகேஷ்பாபு. தெலுங்கில்  முருகதாஸ் இயக்கத்தில்  மகேஷ்பாபு நடிப்பது அக்கடபூமி மக்களும், அருந்தமிழ் ரசிகனும் அறிந்ததே.  சில திரைக்கதைகளை மகேஷிடம் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

அவைகளுக்கு எதிர்பார்த்த லைக்ஸ் குவியாத நிலையில்,  கடைசி அஸ்திரமாக ஒரு அஜித் ஹீரோவாகவும், இன்னொரு அஜித் வில்லனாகவும் அஜித்  இரட்டை வேஷத்தில் நடிப்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி வைத்திருந்த கதையைச் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.

அந்தக் கதையைச் சொன்னதும் ஆடிப்போய் விட்டாராம், மகேஷ். தாஸ் சொன்ன பிற கதைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அஜித்துக்காக செய்த கதையில் தானே நடிக்கிறேன் என்று உடனடியாக கமிட் செய்துவிட்டாராம். 

அந்தக் கதைக்கு 'ரெட்டை தல’  என்று பெயர் சூட்டியிருந்தார் முருகதாஸ். இப்போது அந்தக் கதையைத்தான் முருகதாஸ் இயக்க மகேஷ்பாபு நடிக்கவிருக்கிறார்!

- குணா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close