Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒன்பது குழி சம்பத்... இது திருச்சி கலாட்டா!

மிழ் சினிமாவில் மதுரை, சென்னை, திருநெல்வேலி என்று மாவட்டங்களின் பின்னணியில் வெளிவந்துள்ள திரைப்படங்கள் நிறைய உள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையோடு இணைக்கும் முக்கிய நகரம் திருச்சி.

தமிழகத்தின் மத்திய மாவட்டமும் திருச்சிதான். ஆனால் திருச்சி மாவட்ட கதைக்களத்தை மையமாக வைத்து வெளிவந்துள்ள திரைப்படங்கள் மிக சொற்பமே. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் திருச்சி மாவட்ட மரபுகளை,   அந்த மண்ணின் மொழியை,கலாச்சாரத்தை கதைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தான் 'ஒன்பதுகுழி சம்பத்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவிரி பாயும் திருச்சி மண்ணின் கதைக்களம் என்பதால் பார்வையாளர்களை நிச்சயம் வசீரிகரிக்கும் என்கிறார் ஒன்பதுகுழி சம்பத்தின் ஹீரோ பாலாஜி.

"திருச்சி மாவட்ட கிராமம் ஒன்றின் உயிரோட்டமான கதைதான் படம். பசுமை கொஞ்சும் கிராமத்தில் அன்பும், பாசமும் நிறைந்து கிடக்கும். அதில் விளையாட்டு கேலி கிண்டலாகத் திரியும் இளைஞன்தான் ஹீரோ. அந்த ஊரின் பிரபல கோலி குண்டு விளையாட்டின் மாஸ்டர்.

இந்த கோலி குண்டு விளையாட்டு திருச்சி மாவட்டத்தில் `ஒன்பதுகுழி` என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பதுகுழி காசுகட்டி விளையாடும் பந்தயமாகவும், கிராமத்தின் ஹாட் விளையாட்டாகவும் இருக்கிறது. இந்த விளையாட்டின் விளைவுகள், அது உண்டாக்கும் விபரீதங்கள் அதிலிருந்து மீண்டு ஹீரோ  குடும்ப உறவுகளை எப்படி பாதுகாக்கிறார் என்பதுதான் 'ஒன்பதுகுழி சம்பத்' திரைப்படம்" என்கிறார் பாலாஜி.

சொல்லி அடிங்க கோலியை!

- தேவராஜன்  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close