Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால்?

அட்லீ இயக்கத்தில் தெறி படத்தின் உருவாக்கத்தில் விஜய் பிசியாக இருக்கிறார். சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கும் இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். விஜய்யின் 59வது படமான தெறி ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு ரிலீஸ் என தகவல்கள் வெளியாகிவிட்டன.

தெறி படத்தின் டீஸர், பாடல்கள் வெளியீடு எப்போது என ரசிகர்கள் காத்திருக்கும் வேலையில் விஜய்யின் அடுத்த நாயகி குறித்த செய்திகள் பரவத் துவங்கிவிட்டன. விஜய்யின் 60வது படத்தை பரதன் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரலில் படம் துவங்க உள்ள நிலையில் படத்தின் நாயகி காஜல் அகர்வால் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் ப்ரீ புரடக்‌ஷன் வேலைகள் துவங்கி விட்ட நிலையில் தொழில் நுட்பக் கலைஞர்கள், மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனித் ராஜ் குமாருடன் சக்ரவியூஹ், மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம் படங்களில் பிசியாக இருக்கும் காஜல் அடுத்து விஜய்யின் ஜோடியானால், அந்தப் படம், ஜில்லா, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கும் மூன்றாவது படமாக இருக்கும் எனலாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close