Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கபாலி போல எஸ்3 படத்துக்கும் சிக்கல்

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிக்கும் சிங்கம்3 படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. அங்கு சாலைகள் மற்றும் பொதுஇடங்களில் படப்பிடிப்பு நடந்துவருகிறதாம்.

இதனால் பொதுமக்கள் பலரும் தங்கள் கைபேசியில் படப்பிடிப்புக் காட்சிகளைப் புகைப்படமாக எடுத்து டிவிட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமுகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சூர்யாவின் புதியபுகைப்படங்கள் என்பதால் அலை மிகவேகமாக நிறையப்பேரால் பகிரப்படுகிறது. இது சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அவர்களும் டிவிட்டரில், தயவுசெய்து படப்பிடிப்புக்காட்சிகளைப் பதிவேற்றாதீர்கள், யாராவது பதிவேற்றினாலும் அவற்றைப் பகிராதீர்கள் என்று கேட்டுக்கொண்டதோடு படப்பிடிப்பு சுமுகமாக நடைபெற ஒத்துழையுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கபாலி படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா போன போது அந்தப்படக்குழுவினருக்கும் இதேபோன்ற சிக்கல் ஏற்பட்து. அவர்களும் இதுபோன்றே ஒரு கோரிக்கையை வைத்தனர். அதன்பின் கபாலி படத்தின் படப்பிடிப்புக்காட்சிகள் பகிர்வது குறைந்துவிட்டது. சூர்யா தரப்பின் வேண்டுகோளுக்கும் பலன் கிடைக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close