Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா செய்யும் செயல்

துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பொள்ளாச்சியில் நடந்துகொண்டிருக்கிறது. அந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக முதன்முறையாக த்ரிஷா நடிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முன்பே தொடங்கிவிட்டாலும் இன்றுதான் அதில் த்ரிஷா கலந்துகொள்கிறார். வெளிநாட்டிலருந்து திரும்பிய த்ரிஷா இன்று பொள்ளாச்சி சென்றிருக்கிறார். த்ரிஷா நடிக்கவந்து பதிமூன்றாண்டுகள் ஆகிவிட்டன. தனுஷ் நடிக்கவந்து பதினான்காண்டுகள் ஆகின்றன.

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு இன்றைக்குத்தான் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். த்ரிஷாவும் தனுஷூம் நடிக்கவேண்டிய காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றனவாம். இதற்குப் பிறகு இன்னொரு நாயகியான ஷாம்லி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தங்கமகன் படம் எதிர்பார்த்தபடி சரியாகப் போகாததால் இந்தப்படத்தை நிச்சயம் வெற்றிப்படமாக்கிவிடவேண்டும் என்று மிகத் தீவிரமாக இந்தப்படத்தில் கவனம் செலுத்துகிறார் என்று சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close