Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பீப் பாடல் சர்ச்சை, மீண்டும் சிக்கலில் சிம்பு

சிம்பு பாடிய பீப் பாடல் சர்ச்சை இன்னும் முடியாத நிலையில் பெண்கள் அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் என பல அமைப்புகள் சிம்பு மற்றும் பாடலுக்கு இசையமைத்ததாகக் கூறப்படும் அனிருத் மீதும் வழக்குகள் போட்டன. இதனைத் தொடர்ந்து சிம்பு போலீசில் ஆஜர் ஆகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சிம்பு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

சிம்பு மீது பதிவான அனைத்து சட்டப்பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடியது என்பதால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளும்படி சிம்புவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், கோவை மற்றும் சென்னையில் சிம்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு மட்டும் வருகிற 11–ந் தேதி சிம்பு ஆஜராகவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சிம்பு ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீ சார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நிலுவையில் உள்ளது. எனவே, ஜனவரி 11–ந் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகவேண்டும் என்று உத்தரவை மாற்றியமைக்கவேண்டும். போலீஸ் முன்பு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் சிம்பு, சென்னை போலீசில் மட்டும் ஆஜரானால்போதும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தேன். இந்த உத்தரவை மாற்றி அமைக்கிறேன். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் மற்றும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் முன்பு வருகிற 29–ந்தேதிக்குள் சிம்பு ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிடுகிறேன்.

இந்தத் தீர்ப்பு சிம்புவுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close