Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா

2015ல் நயன்தாரா நடித்த அனைத்துப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் கடந்த வருடத்தின் முடிசூடா நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து 2016ல் அவரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகிவருகின்றன.

மலையாளத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் “புதிய நியமம்” படத்தின் வேலைகள் முழுமையாக முடிந்து வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. படத்தைப் பார்த்த நயன்தாரா படத்தில் தன்னுடைய டப்பிங் சரியாக இல்லையென்பதால், சொந்தக் குரலில் பேச இயக்குநர் எ.கே.சஞ்சனிடம் விருப்பம் தெரிவித்தாராம். அதன் படி வேலைகளும் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.

தெலுங்கில் வெங்கடேஷுடன் ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாம். இறுதிகட்டப் பணிகளில் இருக்கும் அந்தப் படமும் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் இந்தப் படத்தின்  பெயர் இன்னும் உறுதியாகவில்லை என்பது கூடுதல் செய்தி.

தற்பொழுது கார்த்தியுடன் கஸ்மோரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார். அதைத் தொடர்ந்து விக்ரமுடன் இருமுகன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்குநடுவே விக்ரம் இயக்கும் “ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை” வீடியோவில் பங்கேற்றிருக்கிறார்.

இந்த வருடம் தமிழில் மட்டும் சிம்புவுடன் “இதுநம்மஆளு”, ஜீவாவுடன் “திருநாள்”, விக்ரமுடன் “இருமுகன்”, கார்த்தியுடன் “கஸ்மோரா” உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close