Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொங்கல் படங்களின் கதை இதுதானா?

அண்மைக்காலங்களில் இல்லாதவகையில் இந்தஆண்டு பொங்கலுக்கு நான்கு பெரியபடங்கள் வெளியாகவிருக்கின்றன. பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி, ஜி.எம்.குமார் உட்பட பலர் நடிக்கும் தாரைதப்பட்டை. இந்தப்படத்தை ஐங்கரன்நிறுவனம் வெளியிடுகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் கேத்தரின்தெரசா உட்பட பலர் நடித்திருக்கும் கதகளி. இந்தப்படத்தை தேனாண்டாள்நிறுவனம் வெளியிடுகிறது. பொன்ராம் இயக்கத்தில் விசகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருக்கும் ரஜினிமுருகன் இவற்றோடு திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி தயாரித்து நடிக்கும் கெத்து ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன.

இப்படங்களின் கதை என்ன? என்பதைப் பார்ப்போம்.

தாரைதப்பட்டை, கரகாட்டக்கலைஞர்களை மையப்படுத்திய இந்தப்படத்தில் சசிகுமார் நாகஸ்வரம் வாசிப்பவராக நடிக்கிறார். அவருடைய குழுவில் நடனமாடுகிற பெண்களில் முக்கியமானவர் வரலட்சுமி. அவர் பாலியல்தொழிலாளியும்கூட என்று சொல்லப்படுகிறது. அவருக்கு ஒரு கொடுமை நடக்கிறது. அதனால் வெகுண்டெழும் சசிகுமார் செய்யும் அதகளம்தான் படத்தின் மையம் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் அவர் செய்யும் செயலைப் பார்க்கும்போது தப்புச் செய்பவர்களுக்குக் குலைநடுங்குவது நிச்சயம் என்கிறார்கள்.

கதகளி, மென்மை மற்றும் நகைச்சுவைப் படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த பாண்டிராஜ், முதன்முறையாக ஒரு ஆக்ஷன் த்ரில்லர் வகையைக் கையிலெடுத்திருக்கிறார். அதிலும் வித்தியாசம் காட்டியிருப்பதுதான் அவருடைய பாணி என்று சொல்கிறார்கள். தொடக்கத்திலிருந்தே சண்டை என்று இல்லாமல் அமைதியானவராக இருக்கிற விஷால், ஒரு கட்டத்தில் அதிரடி செய்வதுதான் படத்தின் சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

ரஜினிமுருகன், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் வழக்கம்போல வெட்டியாகச் சுற்றுவதிலிருந்து சற்றுமாறி ஒரு டீகடை வைக்கிறார்கள். நாயகனின் தாத்தா ராஜ்கிரண். அவருக்கு அவமரியாதை செய்கிற மாதிரி அவர்களுடைய சொந்தப்பங்காளிகளே நடந்துகொள்கிறார்கள். இதனால் ராஜ்கிரணுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. தாத்தாவுக்காகக் களமிறங்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய பாணியில் வெற்றிகொள்வதுதான் இந்தப்படத்தின் கதை என்றும் சிரிப்பும் பொழுதுபோக்கும் நிச்சயம் என்றும் சொல்கிறார்கள்.

கெத்து, முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உதயநிதி நடித்திருக்கிறார். மான்கராத்தே படத்தைத் தொடர்ந்மு திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில், அப்பா சத்யராஜ் பள்ளிக்கூட வாத்தியார், மகன் உதயநிதி வேலைவெட்டிக்குப் போகாமல் போலிஸ்நண்பர் கருணாகரனுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார். அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் சத்யராஜ் அதன் காரணமாக ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்ற ஆக்ஷன்அவதாரம் எடுக்கிறார் உதயநிதி. இந்தப்படத்தின் கதை அளவுக்குக் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம். படத்தைன் தேனிப்பக்கமுள்ள குமுளியில் நடப்பது போல இருந்தாலும் காட்சிகள் பிரமிப்பாக அமையவேண்டும் என்பதற்காக குலுமணாலி போய்ப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்களாம். ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஆகியோர் படத்துக்குப் பெரும் பலமாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்