Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீடியாக்களை புரட்டி எடுக்கும் கல்கி கோச்லின் !

நடிகையும், அனுராக் கஷ்யப்பின் முன்னாள் மனைவியுமான கல்கி கோச்லின்,குணச்சித்திர நடிப்பிற்காக பல படங்களில் பாராட்டப்பட்டவர். கல்கியின் மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா படத்தில் இவரின் நடிப்பு பெருவாரியாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கல்கி கோச்லின் தி ப்ரிண்டிங் மிஷின் என்னும் ஐந்து நிமிட பாடல் வீடியோ ஒன்றை யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். தினம் தினம் டைப்படிக்கும் மெஷின்களை வைத்து நம்மை பயமுறுத்துகின்றன மீடியாக்கள் என கூறும் அந்த வீடியோவில் மீடியாக்கள், நியூஸ் பேப்பர்கள், நாளிதழ்கள், வார இதழ்கள் என எதையும் விட்டு வைக்கவில்லை.

டக் டக் டக டக டக்.. என பாடிக்கொண்டே பெண்கள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கேங் ரேப் என தலைப்புச் செய்திகளிலும், கவர் ஸ்டோரிகளிலும் நம்மை பயமுறுத்துகின்றன, சின்ன ப்ரிண்டிங் மிஷின் தேசத்தோட அறியாமைத்தனத்தையே இல்லாம ஆக்கப்போகுது என அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். இந்தப் பாடல் தற்போது சமூக வலைகளில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

வீடியோவிற்கு:  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close