Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட, எமி ஜாக்ஸன் இப்படிலாம் பண்ணுவாரா..?

அன்லிமிடட் கால்ஷீட், அழகு அள்ளும் கவர்ச்சி என எந்த எல்லைக்கும் தயாராக இருப்பார். பிரச்னை இல்லாத ஹீரோயின் என்பதுதான் எமி ஜாக்ஸன் பற்றிய பிம்பம். ஆனால், அழகி கொஞ்சம் சிக்கலானவர் என்கிறார்கள் அவர் நடிக்கும் பட யூனிட் ஆட்கள். ஷூட்டிங்கில் இரண்டு நாள் இடைவெளி கிடைத்தாலும் உடனே லண்டனுக்கு பறந்து விடுகிறாராம்.

புதுப்படங்களை ஒப்புக்கொள்ளும் போதே  லண்டனில் இருந்து இங்கே வர, திரும்பிச் செல்ல ஆகும் விமானச் செலவையும் சேர்த்தே பேக்கேஜாக சம்பளம் வாங்கிக் கொள்கிறார். சமயங்களில் சென்னையில் யூனிட்டே காத்திருக்க படப்பிடிப்புக்கு அழைத்தால், 'ஸாரி ஃப்ளைட் மிஸ் ஆகிடுச்சு. அப்புறமா வர்றேன்...’ என கூலாகச் சொல்லி தயாரிப்பையும், டைரக்டரையும் சூடாக்குகிறார்.

'ஐ' படத்தில் நடிக்கும்போதே எமியின் இந்த 'ஃப்ளைட் மிஸ் ஆகிடுச்சு’ வசனம் கேட்டு, ஷங்கர் முதல் லைட் பாய் வரை சலித்துப் போனார்களாம். இப்போது எமி நடித்துக் கொண்டிருக்கும் ஒரு மாஸ் ஹீரோ படத்திலும் ஒரு பாடல் காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி. அதை 'லடாக்’ பகுதியில் படமாக்க இருக்கிறார்கள்.

அதற்காக அங்கே படப்பிடிப்பு நடத்த முன்கூட்டியே அனுமதி வாங்கி எல்லா ஏற்பாடுகளும் முடித்துவிட்டார்கள். ஆனால், இப்போது  லண்டனில் இருந்து வரவேண்டிய எமி ஜாக்ஸன் 'ஃப்ளைட் மிஸ் ஆகிடுச்சு’ என அதே பழைய பல்லவியையே பாட,  டென்ஷனாக கொந்தளித்துக் கிடக்கிறதாம் யூனிட்!

- சத்யாபதி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!