Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாத்தியமாகுமா துப்பாக்கி 2?.... ஏ.ஆர்.முருகதாஸ் பதில்!

விஜய்யின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களைத் தொகுத்தால், துப்பாக்கி படத்தை கண்டிப்பாகத் தவிர்க்க முடியாது. விஜய்யின் மெகா ஹிட் படங்களின் வரிசையில் துப்பாக்கி , கத்தி படங்கள் இரண்டும் மைல்கற்கள் எனலாம்.

இந்நிலையில் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் எப்போது,துப்பாக்கி 2 உருவாகுமா எனக் கேட்டால் இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தெரிவித்து வந்தார். தற்சமயம் சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் மௌனகுரு ரீமேக் படத்தை எடுத்து முடித்த ஏ.ஆர். முருகதாஸ் மகேஷ் பாபுவின் தமிழ், தெலுங்கு இருமொழிப் படத்தில் செம பிசியாக இருக்கிறார்.

இடையில் நடந்த ஒரு சந்திப்பில் துப்பாக்கி 2 குறித்து அவர் பதிலளித்துள்ளார், துப்பாக்கி படத்தின் கதைப்படி அதன் முழுமையான படத்தைக் கொடுத்தாகிவிட்டது. இரண்டாவது பாகத்தில் அதே மாதிரி ஒன் லைன் சொல்லும் நோக்கம் எனக்கில்லை. எனவே துப்பாக்கி 2 கிடையாது. ஆனால் விஜய்யுடன் நான் இணையும் படம் குறித்த தகவல் விரைவில் வரும் எனக் கூறியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்