Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமூக வலைதள ஆண்களே, இதை வாசிக்க நேரமிருக்கிறதா? கேட்கிறார் ஸ்ரீதேவி மகள்!

மீபகாலமாக சமூகவலைதளங்களில் பிரபலங்கள் நேரடியாக ரசிகர்களின் கேலிகளையும், கிண்டல்களையும் எதிர்கொண்டு, அவர்களின் கருத்திற்கு பதில்களையும் அளிக்கின்றனர். ஆனால் தற்போது பிரபலங்கள் மட்டுமின்றி அவர்களது பிள்ளைகளும் இது போன்ற கேலி, கிண்டல்களை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலான பிரபலங்களின் பிள்ளைகள் அவ்வப்போது அவர்களது புகைப்படங்களை  ட்விட்டர், முகநூல், இன்ஸ்டக்ரம் போன்ற சமூகவலைதளங்களில் பதிவு செய்வதுண்டு. அவை வைரலாகவும் மாறி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுண்டு.

தற்போது இவ்வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள விஷயம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் இன்ஸ்டக்ரமில், ஒருவரது உடலமைப்பை கிண்டல் செய்து, அநாகரிகமாக கருத்துகளைப் பதிவு செய்பவர்களைக் குறித்து, அவர் கூறியுள்ள கருத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

" என் புகைப்படத்தை நான் பதிவிடும் போது, அவை பதிவிடுதலுக்கு ஏற்றது என்ற நம்பிக்கையுடனே பதிவிடுகிறேன், விளம்பரத்திற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்தோடும் ,நான் அதைச் செய்வதில்லை.

எப்போது நான் எனது புகைப்படத்தினை பதிவு செய்தாலும் உடனே என் தோற்றம், உடை போன்றவற்றை மதிப்பீடு செய்வதில் அதிக உரிமை எடுத்துகொள்கின்றனர் சிலர். எனக்கு அது சரி என்று தோன்றும் போதே நான் என் புகைப்படத்தை வெளியிடுகிறேன். ஒவ்வொருவருக்கும் அவரது கருத்துகளைக் கூற உரிமை உண்டு, ஆனால் ஒருவரைப் பற்றி இழிவாகவோ, அவரைத் தாக்கியோ கருத்து கூறும் போது ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து கூறுங்கள். இது வேடிக்கையாக எடுத்துக்கொள்ளக் கூடிய விஷயம் அல்ல. இன்றளவும் பெண்கள் அவர்களது உடலமைப்பிற்காகக் கேலி செய்யபடுவது வருத்தமான விஷயம். இனி இதுபோன்ற விஷயங்களுக்காக நான் கவலைபடப்போவதில்லை" என்று கூறியுள்ளார்.

15 வயதே நிரம்பிய குஷி கபூரின் இந்தக் கருத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்குமுன்னதாக பூஜா பேடியின் மகள் ஆழியாஹ்வின் புகைப்படம் குறித்து சிலர் இழிவாகக் கூறிய கருத்திற்கு, ஆழியாஹ் தன்னை கேலி செய்தவர்கள் தங்களது வாயை மூடிக்கொள்ளும் படி, தனது தெளிவான, உறுதியான பதிலைக் கூறியிருந்தார்.

" ஒவ்வொரு பெண்ணிற்கும் தான் விரும்புகின்ற உடையை அணிந்து கொள்ள உரிமை உண்டு. வழக்கமாகவே ஒரு பெண் தான் உடுத்துகின்ற உடையின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறாள்.

 அப்படி பார்த்தால் இந்தியப் பெண்கள், அரபுநாட்டில் உள்ள பெண்களை விட ஒழுக்கங்கெட்டவர்கள், ஏனென்றால் நாம் நம் முகங்களை பிறருக்குக் காட்டுகின்றோமே" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்களின் பிள்ளைகளோ அல்லது சாதாரணப் பெண்களோ, யாராக இருந்தாலும் அவர்களது உடலமைப்பை சாடுவது என்பது விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இல்லை என்பதை, இக்காலத்து இளைஞர்களுக்கு, உணர்த்தியுள்ளனர் நம் இளம் பெண்கள்.

இதில் நடிகர் நடிகைகளின் மகள்கள் மட்டுமல்ல, சாதாரணப் பெண்களும் சிக்கித் தவிக்கிறார்கள். சமூக வலைதளங்கள் என்பது ஆண்களுக்கு எப்படியோ அதே போல் தான் பெண்களும் தங்கள் சந்தோஷ, தருணங்களைப் பகிர்ந்துகொள்ள, புகைப்படங்களைப் பகிர என பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆண்களுக்குக் கிடைக்காத அந்த கிண்டல்களும், கேலிகளும் பெண்களுக்கு மட்டும் ஏன். ஏன் என்ற கேள்வி பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

-பிரியாவாசு- 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.