Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிக்கலுக்குள்ளாகும் விஐபிகளுக்கு அனிருத் காட்டிய வழி

இணையதளங்களில் சர்ச்சைக்குள்ளான பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு, அனிருத் இருவர் மீதும் வழக்குப் போடப்பட்டது. மேலும் இது தொடர்பாக இருவரும் போலீஸார் முன்பு ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் அனிருத் நேற்று முன் தினம் நள்ளிரவில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முன் ஆஜராகி தனது விளக்கக் கடிதத்தை ஒப்படைத்தார். மேலும், இந்தப் பாடலுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என சிம்பு கூறிய தகவலை ஒரு சிடியாக பதிந்தும் கொடுத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில்,

சமூக வலைதளங்களில் வெளியான ‘பீப்’ பாடலுக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நான் அந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை. எனது பெயர் இதில் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. நான் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவன். நான் ஒப்பந்தங்கள் மூலம் சினிமாவுக்கு மட்டும் இசையமைத்து வருகிறேன். ‘பீப்’ பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என்று நடிகர் சிம்பு கூறி உள்ளார்.

என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது நான் தமிழகத்தில் இல்லை. இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்று இருந்ததால், நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கமுடியவில்லை. இருந்தபோதிலும், என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், போலீசார் என்னை ஆஜராக சொன்னால் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். 

இந்தச் சிக்கல் தொடங்கியதிலிருந்தே ஊடகங்களிடம் மெளனம் பேணி வந்த அனிருத், இம்முறையும் ஊடகங்களிடமிருந்து தப்ப வேண்டுமென்பற்காகவே  நள்ளிரவில் வந்திருக்கிறார். இதன்மூலம் சிக்கலுக்குள்ளாகும் விஐபிகளுக்கு ஒரு புதுப்பாதையைத் திறந்து வைத்திருக்கிறார். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!