Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகராகத் தோற்றுவிட்டாரா தனுஷ்?

தேசிய விருது முதல், விஜய் விருது வரை என எல்லா விருது விழாக்களிலும் தனுஷின் பெயர் கண்டிப்பாக அடிபடும். அப்படியிருக்கையில் 2015ம் ஆண்டு மட்டும் தனுஷ் சம்மந்தப்பட்ட படங்களாக மட்டும் ஆறு படங்கள் வெளியாகியுள்ளன. அதில் தனுஷ் நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. ஷமிதாப், அனேகன், மாரி, தங்க மகன்.

எனினும் அவர் தயாரித்த காக்கா முட்டை, மற்றும் நானும் ரவுடிதான் படங்கள் மட்டுமே ஹிட்டடித்தன. பாலிவுட்டின் ஷமிதாப் படத்தை நடிப்பிற்காகப் பலரும் பாராட்டினாலும் வசூல் அளவில் படம் சற்று தொங்கியது. அடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு ஏமாற்றிய படம் அனேகன். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நான்கு வேடங்களில் கலக்கினாலும் இசை மட்டுமே இப்போதுவரை டிரெண்டில் உள்ளது. படம் கமர்ஷியல் அளவில் கொஞ்சம் சொதப்பலே.

மாஸ் ஓபன், க்ளாஸ் சீன்ஸ் என மாரி படமும் , படம் முழுக்க செஞ்சுடுவேன் என சொல்லிய தனுஷால் வசூலில் பெரிதாக செய்யவில்லை. பலரையும் ஏமாற்றிய படம் என்றும் சொல்லலாம். சரி விஐபி டீம், இசை அனிருத் என பலரும் வேலையில்லாப் பட்டதாரியை மனதில் வைத்துகொண்டு படத்தைக் காண வந்தால் அந்தோ பரிதாபமாக பலரிடமும் திட்டுகளையே வாங்கியது தங்கமகன்.

இந்நிலையில் தனுஷ் நடிக்காத நானும் ரவுடிதான், மற்றும் காக்கா முட்டை ஆகிய  படங்களே மே 2015ல் வெற்றிகளையும், பாராட்டுகளையும் குவித்ததோடு விருதுகளின் பட்டியலையும் நிறைத்துள்ளன.

2016ம் ஆண்டாவது தனுஷ் தனது மார்கெட்டை மீண்டும் பிடிப்பாரா? பார்க்கலாம்! இந்த வருடமும் தனுஷிற்கு  கொடி, ரயில், வடசென்னை  என வரிசையில் படங்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close