Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல்ஹாசனுக்குக் கிடைத்த வாய்ப்பால்...சினிமாவில் மாற்றங்கள் நிகழுமா?

சினிமா படைப்பாளிகளுக்கும் சென்சார் தரப்பிற்கும் உள்ள உறவு அவ்வப்போது விரிசல்களை சந்தித்தாலும் அவர்கள் இல்லாமல் இவர்கள் இல்லை, இவர்கள் இல்லாமல் அவர்கள் இல்லை என்ற நிலை இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்தியா முழுவதும் திறமையான சினிமா நபர்களை சென்சாரில் அங்கமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

அதில் முதற்கட்டமாக கமல் ஹாசன், இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷாஜி என்.கருண், பெங்கால் இயக்குநர் கௌதம் கோஷ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் உள்ளன. சினிமாவைச் சார்ந்த நபர்களே சென்சாரில் முக்கிய பங்கு வகிக்கும் போது சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதே இந்த முடிவின் நோக்கம்.

சமீபகாலமாக சினிமா படைப்பாளிகள் சென்சார் தரப்பால் சினிமாவின் சுதந்திரமின்மை நிலவுவதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் திறம்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது கமல்ஹாசனை தணிக்கை குழு உறுப்பினராக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்சாருக்கும், சினிமா தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் இனி குறையலாம் என எதிரிபார்க்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close