Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண்டிப்பாக வழக்குப் போடுவேன்..உதயநிதி ஸ்டாலின் கோபம்!

திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ், விக்ராந்த், கருணாகரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கல் சிறப்பாக வெளியான படம் கெத்து. படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தின் பெயர் தமிழில் இல்லை என தற்போது வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கெத்து’ என்பது தமிழ் பெயர் தான் எனவும், கெத்து என்றால் தந்திரம் என தமிழ் டிக்‌ஷனரியில் இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும் படத்திற்கு யு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்குப் போடவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கெத்து என்ற வார்த்தை தமிழ் வார்த்தை, அதற்கு தமிழ் டிக்‌ஷனரியிலேயே அர்த்தம் இருக்கிறது என்பதால் உதயநிதி இதை இப்படியே விட்டுவிடப்போவதில்லை எனவும் சொல்லப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!