Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த வருடம் டெரர் காதலர் தினம்!

காதலர் தினம் என்றாலே கொஞ்சம் ஜாலியான, ரொமாண்டிக் படங்கள் ரிலீஸாவது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வு. அப்படித்தான் சென்ற வருடம் அனேகன், மனிதக் காதல் அல்ல, போன்ற படங்களும், அதே போல் அதற்கு முந்தைய வருடம் இது கதிர்வேலன் காதல் போன்ற படங்கள் வெளியாகின.

இந்த வருடம் மிகப்பெரிய மாற்றமாக பேய் படங்களும், திகில் படங்களும் வெளியாகவிருக்கின்றன. ஜெயம் ரவி , லட்சுமி மேனன் நடிப்பில் தமிழ் சினிமாவின் முதல் ஸோம்பி படமான மிருதன் படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதுமட்டுமின்றி ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் பேய்ப்படமாக உருவாகியுள்ள சவுகார்பேட்டை, அஸ்வின், ஷிவதா நடிப்பில் உருவான மற்றொரு திகில், அமானுஷ்ய படமான ஸீரோ, மற்றும் சித்தார்த் நடிப்பில் பெண் கதாபாத்திரங்களே இல்லாத ஜில் ஜங் ஜக் என வரிசைக் கட்டிக் கொண்டு ரிலீஸுக்காகக் காத்து நிற்கின்றன. எந்தப் படம் ஈர்க்கும், எந்தப் படம் பாக்ஸ் ஆபீசை நிறைக்கும் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close