Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாரா மீது தவறில்லை...’இது நம்ம ஆளு’ குறித்து பாண்டிராஜ் பதில்!

கதகளி பலரிடமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் பாண்டிராஜ் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். கதகளி படத்திற்குக் கொடுத்த ஆதரவிற்கு நன்றிகளை தெரிவித்த பாண்டிராஜ் தனது துணை இயக்குநர்களையும் மேடையில் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து நிருபர்கள் பாண்டிராஜிடம் கேள்விகள் கேட்டனர். அதில் இது நம்ம ஆளு படம் குறித்து பாண்டிராஜ் பேசுகையில், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்று இது நம்ம ஆளு படமும் ஜாலியான படம். இந்தப் படத்தைப் பொருத்தமட்டில் நயன்தாரா மீது எந்தத் தவறும் இல்லை.

அவர் சரியான முறையிலேயே கால்ஷீட் கொடுத்தார், அதை நாங்கள் தான் பயன்படுத்தவில்லை. இந்தப் படம் முடிவதற்குள் அவர் நிறைய படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார். எனினும் மீதியுள்ள ஒரு பாடல் காட்சியில் அவர் நடிப்பார் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் சிம்பு நயன் இருவரையும் ஜோடியாக நடிக்கவே வைத்து விட்டேன். கண்டிப்பாக படம் விரைவில் திரைக்கு வரும் என்றார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்