Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண்டிப்பாக தமிழினம் இதை ஏற்றுக்கொள்ளாது....வைரமுத்து ஆதங்கம்!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பேசினார் கவிஞர் வைரமுத்து. அப்போது ஜல்லிக்கட்டுத் தடை குறித்து அவர் தன் மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகளுக்கு எந்தக் காயமும் ஏற்படாது. சட்டம் வெறும் காட்சிப்பட்டியலில் காளைகளை சேர்த்ததால் தடை செய்யப் பட்டிருக்கிறது. சட்டத்தைத் திருத்த வேண்டும். சட்டத்திருத்தம் தேவை. ஏறுதழுவுதல் என்பது எண்பது ஈராயிரம் ஆண்டுத் தமிழர்க் கலாச்சாரம்.

இந்த பழம்பெரும் கலாச்சாரத்தை ஒரு சட்டம் முடக்குகிறது .இதைக் கண்டிப்பாக தமிழினம் ஏற்றுக்கொள்ளாது. இது தமிழர்களின் வீர விளையாட்டு. இதில் காளைகளுக்கு காயம் படுவதில்லை. இதை விளையாட்டாகக் கருதவேண்டுமே தவிர விலங்கு வதையாகக் கருதக்கூடாது .

திருவள்ளுவர் உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே என்றுதான் எழுதினாரே தவிர்த்து வேட்டி இழந்தவன், சேலை இழந்தவன் என காலத்துக்கேற்ப மாற்றவில்லை. அது போல் தான் தமிழ் கலாச்சாரமும் பல மழமைகளையும், கலாச்சாரங்களையும் கொண்டது அதை இப்போது உருவான சட்டங்கள் கொண்டு முடக்குவது சரியல்ல எனக் கூறினார் வைரமுத்து.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்