Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகம் சம்பளம் கேட்கிறாரா சிவகார்த்திகேயன்?

கதகளி பலரிடமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் பாண்டிராஜ் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். கதகளி படத்திற்குக் கொடுத்த ஆதரவிற்கு நன்றிகளை தெரிவித்த பாண்டிராஜ் தனது துணை இயக்குநர்களையும் மேடையில் அறிமுகப்படுத்தினார்.

அப்போது நிருபர்கள் , சிவாகார்த்திகேயனுடன் அடுத்து ஒரு படம் தயாரிக்கப்போவதாகச் சொல்லப்படுகிறதே? என்ற கேள்வி கேட்க, அதற்கு பாண்டிராஜ். பசங்க புரடக்‌ஷன் சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ணும் அளவிற்கு வளரணும். சிவகார்த்திகேயன் இப்போது பல கைகளை நீட்டி சம்பளம் கேட்கிறார்.

இப்போதைக்கு சிவகார்த்திகேயனை வைத்துப் படம் பண்ணும் அளவிற்கு பசங்க புரடக்‌ஷன் வளரவில்லை,அடுத்து புதுமுகங்களை வைத்து ஒரு படம் எடுக்கும் நோக்கத்தில் இருப்பதாகக் கூறினார் தயாரிப்பாளரும் , இயக்குநருமான பாண்டிராஜ். சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவரே இயக்குநர் பாண்டிராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்