Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாராவைப் பின்பற்றும் அஞ்சலி

தமிழ், தெலுங்கு என்று மாறி மாறி நடித்துவருகிறார் அஞ்சலி.  தெலுங்கில் மூன்று படங்களும் தமிழில் மூன்று படங்களும் அவர் கைவசம் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து, இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராக இருந்த சர்வேஷ் என்பரின் இயக்கத்தில் தமிழில் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தாகியிருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகவிருக்கிறதாம். இப்படத்திற்கு “காண்பது பொய்” என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். புதுமுக நடிகர் அம்ஜத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி ஒப்பனைக் கலைஞராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.  பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக குரல்கொடுக்கும் விதமாக அக்கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். 

இப்படத்தின் கதையைக் கேட்டவுடனே அஞ்சலி ஓகே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அதனால், அதிகப்படியான தேதிகளை இப்படத்திற்காக ஒதுக்கியிருக்கிறாராம். குன்னூரில் படப்பிடிப்பு இன்று தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னுடைய பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் புதுமுகநடிகருடனும் நடிக்கும் நயன்தாராவைப் பின்பற்றுகிறார் அஞ்சலி என்று சொல்கிறார்கள்.
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்