Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தெறியைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. மொத்தம் 185 நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இவற்றில் எண்பத்தைந்துநாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தியதாகச் சொல்கிறார் இயக்குநர் அட்லி.

இந்தப்படத்தில் இவருடைய கடும்உழைப்பிற்கான பலன் உடனே கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இயக்குநர் அட்லியின் உழைப்பு மற்றும் படைப்பாற்றலை முழுமையாகத் தெரிந்துகொண்ட விஜய், அடுத்தும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். தெறி படத்தைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்திற்கு அடுத்து மீண்டும் அட்லி படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் அட்லி. தெறி படத்தின் முடிவுதான் அடுத்தபடத்தைத் தீர்மானிக்கும் என்பது பொதுவான கணக்கு. தெறி வெற்றி என்றால் இருவரும் மீண்டும் சேர்ந்து படம் எடுப்பார்கள் இல்லையென்றால் இல்லை என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.

ஆனாலும் விஜய்யைப் பொறுத்தவரை, இயக்குநரின் வேலை மற்றும் அவர் சொல்லும் கதை ஆகிய இரண்டும் பிடித்திருந்தால் முந்தைய படத்தின் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படமாட்டார் என்பதால் மீண்டும் அவர்கள் இணைவது உறுதியாக நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!