Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.வி.பிரகாஷிடம் ரஜினி என்ன சொன்னார்?

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு எனக்கு இன்னொரு பேர் இருக்கு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பு ரஜினியின் பாட்ஷா படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்குகிறார் டார்லிங் பட இயக்குநர் சாம் ஆண்டன்.

இந்நிலையில் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாரும், இயக்குநர் சாம் ஆண்டனும் இணைந்து ரஜினிகாந்தை அவரது எந்திரன் 2.O படத்தின் தளத்திலேயே சந்தித்துள்ளனர். படத்தின் தலைப்பைக் கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ள ரஜினிகாந்த் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ்,  இந்தத் தலைப்பு ரஜினி சாரின்  பாட்ஷா படத்திலிருந்தே எடுக்கப்பட்டது.இந்தத் தகவலை நான் அவரிடம் சொல்லவேண்டும் என விரும்பினேன். அவரை நான் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்த போது என்னைப் போலவே அவரும் ஆச்சர்யமடைந்தார். தலைப்பு குறித்து கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்தார். நான் நடனத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து விட்டதாகவும், டார்லிங் படத்தின் காமெடி காட்சிகள் குறித்து பாராட்டியும் பேசினார்.

இயக்குநர் சாம் ஆண்டன், தெலுங்கிலும் இதே தலைப்பை , நாக்கு இன்கோ பேருண்டி என வைத்துள்ளதாக தெரிவித்தபோது மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளையும் கூறினார். மேலும் ஷங்கருடனும் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்புக் கிடைத்ததாகk கூறியுள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close