Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உதயநிதி படத்தில் சிம்புவின் நாயகி

உதயநிதி, விஷ்ணு விஷால், சுசீந்திரன், மஞ்சிமா மோகன், ரெட் ஜெயண்ட் புரடக்‌ஷனின் புதுப் படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

விஷால் நடிப்பில் பாயும்புலி படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்தபடத்தில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் மற்றொரு நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார்.

விஷ்ணு விஷால் ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் ‘வெண்ணிலா கபடிகுழு”,“ஜீவா” உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மூன்றாவது முறையாக சுசீந்திரன் - விஷ்ணு கூட்டணி இப்படத்தில் தொடர்கிறது.

சிம்புவுடன் “அச்சம் என்பது மடமையடா” படத்தில் அறிமுகமாகவிருக்கும் மஞ்சிமா மோகன் இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் முதல்படம் வெளிவருமுன்பே அடுத்து ஒரு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஞ்சிமாமோகன்.

டி.இமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்