Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த்ரிஷா, சமந்தா, நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னா!

சமீபகாலமாக நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு தாங்களே டப்பிங் கொடுப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். த்ரிஷா ஏற்கனவே சில படங்களில் டப்பிங் கொடுக்க ஆரம்பித்துவிட்டார், அதே போல் சமந்தா நீதானே என் பொன் வசந்தம் , 10 எண்றதுக்குள்ள படத்திலும் டப்பிங் கொடுத்தார்.

அதிலும் சமந்தா 10 எண்றதுக்குள்ள படத்தில் ரெட்டை வேடத்தில் இரண்டு கேரக்டர்களுக்கு சரியான வித்தியாசங்களைக் காட்டி குரல் கொடுத்திருப்பார். இவரைத் தொடர்ந்து நயன்தாரா. நானும் ரவுடிதான் படத்தில் நயன் தாராவின் குரல் பலரின் பாராட்டுகளையும் பெற்றது. அவரது டப்பிங் குரலைக் காட்டிலும் ஒரிஜினல் குரலே அழகு என கருத்துகளும் வந்தன.

இப்போது இவர்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் தமன்னா. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் தர்மதுரை படத்தில் தான் தமன்னா டப்பிங் பேசவிருக்கிறார். மேலும் கூலர், சேலை கட்டியிருக்கும் விதம் என அப்படியே புதுமைப்பெண் படத்தின் ரேவதி பாத்திரத்தைப் பிரதிபலிக்கிறது தமன்னாவின் கெட்டப் என்பதால் அவரது பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close