Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று மாதங்களுக்குக் கறுப்பாக இருப்பேன் - அதிரவைக்கிறார் நமீதா!

உடல் பருமனால் சினிமா வாய்ப்பை இழந்த நமீதா திடீரென்று ஒல்லிப் பெண்ணாக லைம் லைட்டிற்குள் சமீபத்தில் வந்தார். தொடர்ந்து அவருக்குப் படவாய்ப்பும் வரதொடங்கிவிட்டது.  கவர்ச்சிப் பெண்ணாக படங்களில் நடித்துவந்த நமீதா அகோரியாக நடிக்கவிருக்கிறார்.

பரத் ஹீரோவாக நடிக்க இனியா, மனிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் படம் “பொட்டு”. பேய்ப் படமாக உருவாகிவரும் இப்படத்தில் தான் நமீதா அகோரியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் நமீதா.  இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பற்றிய ரகசியங்களை உடைத்தார்.

“வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது, அதை  பொட்டு படத்தின் மூலம் ஆரம்பிக்கவிருக்கிறேன். இந்தப் படத்துக்காக நான் கறுப்பு நிறத்துக்கு மாறுகிறேன். இதற்காக துபாய் சென்று, ‘மேக்கப்’ மூலம் உடல் நிற மாற்றம் செய்து கொள்கிறேன். 3 மாதங்கள் வரை என் தோலின் நிறம் கறுப்பாகவே இருக்கும். அதன்பிறகு பழைய நிறம் வந்து விடும்.

தினமும் ட்விட்டர் மூலம் மச்சான்களுடன் பேசும்போது நிறைய ரசிகர்கள் என்னைக் காதலிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களின் காதலே போதும், எனக்குக் கல்யாணம் தேவையில்லை. வாழ்நாள் முழுவதும் நடிகையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

என் ரசிகர்களுக்காத தான் 96 கிலோ எடையிலிருந்து 73 கிலோவாக குறைத்திருக்கிறேன். இன்னும் 8 கிலோ குறைக்கப்போகிறேன்.” என்று முடித்தார் நமீதா.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்