Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெறியுடன் மோதுகிறதா இதுநம்மஆளு?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடித்திருக்கும் இதுநம்மஆளு படத்தை பிப்ரவரி 14 காதலர்தினத்தன்று வெளியிட்டுவிடத் திட்டமிட்டிருந்தார்கள். அந்தப்படத்தை தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

தேனாண்டாள்பிலிம்ஸ் வெளியிடுகிறார்கள் என்றால் சிக்கல் இல்லாமல் படம் வெளியாக வாய்ப்பு இருக்கிறதென்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் ஏற்கெனவே சொன்ன மாதிரி பிப்ரவரி 14 இல் படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் சொல்கிறார்கள். இரண்டுபாடல்கள் இல்லாமல் இரண்டுமணி நேரப் படம் தயாராக இருக்கிறது என்று பல மாதங்களுக்கு முன்பாக இயக்குநர் பாண்டிராஜ் சொல்லியிருந்தார். ஆனாலும் அவ்விரு பாடல்களையும் படமாக்கிவிடவேண்டும் என்று சிம்பு விரும்புவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் கண்டிப்பாக நயன்தாரா வரமாட்டார் என்பதால் ஒரு பாடலை மட்டும் படமாக்கிவிடத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்த ஒரு பாடலையும் எடுத்து முடித்த பிறகே படத்தின் வெளியீடு எப்போதென்று தெரியும் என்கிறார்கள். பிப்ரவரியில் வெளியாகாவிட்டால் அடுத்து ஏப்ரலில்தான் படத்தை வெளியிட்டால்தான் நல்லவசூல் பார்க்க முடியும் என்பது திரைத்துறையினரின் கணக்கு. அதனால் படம் ஏப்ரலுக்குப் போகும் வாய்ப்பு இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

ஏப்ரலில் பெரிய ரிலீஸ் தேதி 14. அந்தத் தேதியில் ஏற்கெனவே விஜய்யின் தெறி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே தேதியில் இந்தப்படமும் வரலாம் அல்லது அதற்கு முன்போ பின்போ வரலாம் என்றும் எப்படியும் ஏப்ரலில் கண்டிப்பாகப் படம் வெளியாகிவிடும் என்கிற பேச்சு இருக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close