Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யை நம்பி புதியபயணம் தொடங்கியிருக்கும் ஜி.வி.பிரகாஷ்

இளம் தலைமுறையினரின் பேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இப்போ நடிகராகவும் மாஸ் ஹிட் படங்களை கொடுத்துவருகிறார். அதோடு கமல், பார்த்திபன் ஆகியோரைப் போல ஜி.வி. பிரகாஷும் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

யூடியூப் சேனலை தொடங்கியதுடன், அறிமுக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “ இசைத்துறையில் கால் பதித்து 10 வருடங்கள் ஆகின்றன. என்னுடைய 50வது படத்தையும் முடித்துவிட்டேன். என்னுடைய 50 ஆவது படம் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி. 

இப்படத்தின் மேக்கிங் வீடியோ, என்னுடைய இசை சார்ந்த வீடியோக்கள், அதுமட்டுமல்லாமல் என்னுடைய படத்தின் வீடியோக்கள் இந்தச் சேனலில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்” என்று கூறியுள்ளார். விஜய் படம் பற்றிய வீடியோக்களை வெளியிட்டால் தொடங்கிய உடனே யூடியூப் சேனல் பிரபலமாகும் என்பதில் மாற்றமில்லை.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், பென்சில், கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு உள்ளிட்ட படங்கள் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close