Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெறியில் விஜய் மகள் நடித்திருக்கிறாரா?

தமிழ் சினிமாவைப் பொருத்தமட்டில் ஓபனிங் கிங்ஸ் என்றால் விஜய், அஜித் தான். இருவரின் படங்கள் ரிலீஸ் என்றால் விழாக்கோலமாக்கி விடுவார்கள் ரசிகர்கள். அஜித் படம் ஜூன் மாதத்திற்குப் பிறகு தான் துவங்கும் என்ற நிலையில் விஜய்யின் தெறி படம் குறித்த செய்திகள் தினந்தோறும் இணைய வெளியை பரபரப்பாக்கி வருகின்றன.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் தான் மீனாவின் மகள் விஜய்க்கு மகளாக நடித்திருக்கிறார். தற்போது புதிய செய்தியாக விஜய்யின் மகள் திவ்யா இந்தப் படத்தில் இன்னொரு மகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

திவ்யாவுக்கு டீச்சராகவே எமி ஜாக்சன் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சமீபத்தில் லடாக் பகுதிகளில் எடுக்கப்பட்டு அத்துடன் படப்பிடிப்புகள் யாவும் நிறைவடைந்தன. அந்த லடாக் படப்பிடிப்பு காட்சிகளில் திவ்யாவும் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இது உண்மையெனில் விஜய் மகள் அறிமுகமாகும் முதல் படம் தெறி எனலாம். வாழ்த்துகள் குட்டி திவ்யா!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close